sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 தலைமை செயலகம் முற்றுகையிட முயன்ற ஒப்பந்த ஆசிரியர்கள் கைது

/

 தலைமை செயலகம் முற்றுகையிட முயன்ற ஒப்பந்த ஆசிரியர்கள் கைது

 தலைமை செயலகம் முற்றுகையிட முயன்ற ஒப்பந்த ஆசிரியர்கள் கைது

 தலைமை செயலகம் முற்றுகையிட முயன்ற ஒப்பந்த ஆசிரியர்கள் கைது


ADDED : பிப் 24, 2026 04:28 AM

Google News

ADDED : பிப் 24, 2026 04:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பணி நிரந்தரம் செய்யக்கோரி தலைமை செயலகம் முற்றுகையிட பேரணியாக சென்ற ஒப்பந்த ஆசிரியர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

புதுச்சேரி, பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் 292 ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி, கடந்த 21ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம், சட்டசபை முற்றுகை, சிறை நிரப்பும் போராட்டம், 2 நாள் தொடர் தர்ணா மற்றும் மவுன ஊர்வலம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, பணி நிரந்தரம் செய்யக்கோரி தலைமை செயலகத்தை முற்றுகையிட பேரணி நேற்று நடந்தது. அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவ தலைவர் சேஷாசலம் தலைமையில், 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஆசிரியர்கள், பாலசேவிக்காக்கள் கலந்து கொண்டனர்.

ராஜா தியேட்டர் அருகே துவங்கி நேரு வீதி வழியாக சென்ற பேரணியை, பெரியக்கடை போலீசார் கொசக்கடை வீதியில் பேரிகார்டு அமைத்து தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பேரணியில் ஈடுபட்டவர்கள் அங்கேயே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us