தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பணி நிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த ஆசிரியர்கள் 2ம் நாள் போராட்டம்

 பணி நிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த ஆசிரியர்கள் 2ம் நாள் போராட்டம்

 பணி நிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த ஆசிரியர்கள் 2ம் நாள் போராட்டம்


ADDED : ஜன 23, 2026 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 05:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி நேற்று 2வது நாளாக கல்வித்துறை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி பள்ளி கல்வித்துறையில் கவுரவ விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பால சேவிக்கா உள்ளிட்ட 292 ஆசிரியர்கள் கடந்த 6 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி, கடந்த டிசம்பர் 24ம் தேதி மீண்டும் கல்வித்துறை வளாகம் எதிரே ஒப்பந்த ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

அப்போது, பேச்சு வார்த்தை நடத்திய அமைச் சர் நமச்சிவாயம், அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என, உத்தரவாதம் அளித்திருந்தார். இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை.

இதனை கண்டித்தும், பணி நிரந்தரம் செய்யகோரியும் ஒப்பந்த ஆசிரியர்கள் நேற்று 2வது நாளாக கல்வித்துறை வளாகம் எதிரே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நேரு எம்.எல்.ஏ., அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் ஆகியோர், ஒப்பந்த ஆசிரியர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில துணைச் செயலாளர் காந்தி, மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us