/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒப்பந்த ஆசிரியர்களுக்கு 8 மாத காலம் பணி நீட்டிப்பு
/
ஒப்பந்த ஆசிரியர்களுக்கு 8 மாத காலம் பணி நீட்டிப்பு
ஒப்பந்த ஆசிரியர்களுக்கு 8 மாத காலம் பணி நீட்டிப்பு
ஒப்பந்த ஆசிரியர்களுக்கு 8 மாத காலம் பணி நீட்டிப்பு
ADDED : ஜூலை 31, 2025 03:06 AM
புதுச்சேரி:புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியர்கள் 289 பேருக்கு, 8 மாதம் பணி நீட்டிப்பு வழங்கி, கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி கல்வித்துறையில் 2021ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் 289 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து, ஆண்டுதோறும் அவர்களின் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, கடந்த மார்ச் மாதம் கல்வித்துறை ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்து பணியாணை வழங்கியது.
இதனால், ஏற்கனவே பணியாற்றிய ஒப்பந்த ஆசிரியர்களின் பணி காலம் கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அவர்களின் ஒப்பந்த காலம் நீட்டிக்கப்படவில்லை. இதையடுத்து ஒப்பந்த ஆசிரியர்கள் மீண்டும் பணி வழங்ககோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.
அப்போது பேச்சு வார்த்தை நடத்திய முதல்வர் ரங்கசாமி 6 மாதம் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என்றும், அதன் பின் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இதையேற்று ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் முதல் 2026 மார்ச் வரை 8 மாதம் ஆசிரியர்களின் ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கான கோப்பிற்கு கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார்.