/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
/
ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
ADDED : டிச 28, 2025 05:42 AM
புதுச்சேரி: ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டம் வரும் 2ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது என அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவ தலைவர் சேஷாச்சலம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பால சேவிக்காக்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கடந்த 24ம் தேதி முதல் கல்வித்துறை வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் போராட்டக் குழுவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், கவுரவ தலைவர் சேஷாச்சலம், அரசு ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாரி, பாலகுமார், மோகன்தாஸ் மற்றும் போராட்டக்கள நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, பணி நிரந்தர ஆணை வரும் ஜனவரி 2026க்குள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.
இந்நிலையில், புதுச்சேரிக்கு துணை ஜனாதிபதி வருகை மற்றும் புத்தாண்டு உள்ளதால் போராட்டத்தை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, வரும் ஜனவர் 2ம் தேதி வரை காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்தாக போராட்ட குழுவினர் முடிவு செய்துள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

