தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓய்வூதியர்களுக்கு ஒப்பந்த பணியா? அ.தி.மு.க., அன்பழகன் ஆவேசம்

 ஓய்வூதியர்களுக்கு ஒப்பந்த பணியா? அ.தி.மு.க., அன்பழகன் ஆவேசம்

 ஓய்வூதியர்களுக்கு ஒப்பந்த பணியா? அ.தி.மு.க., அன்பழகன் ஆவேசம்


ADDED : பிப் 12, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 04:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பல் மருத்துவக் கல்லுாரியில் காலி பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில், ஓய்வு பெற்ற ஊழியர்களை கொண்டு நிரப்புவதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என அ.தி.மு.க., அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:

மாநிலத்தில் அரசு பணியிட நியமன விதிகளில் கால சூழலுக்கு ஏற்ப மாற்ற வேண்டியது அவசியம். நிலையான பணி நியமன விதிகள் இல்லாததால் பல துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருகிறது. முன், அரசு பணியி டங்களை நிரப்பும்போது வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பவர்களில், சீனியாரிட்டி அடிப்படையில் ஒரு இடத்திற்கு 20 பேர் வீதம் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். தற்போது அந்த நிலை மாற்றி, தகுதியான யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என, மா ற்றியுள்ளதால், அரசு பணிகள் புதிய இளைஞர்களுக்கு மட்டும் வேலை கிடைக்கும் நிலை உள்ளது.

இது 10 ஆண்டிற்கு முன் படித்தவர்களுக்கு அரசு செய்யும் அநீதி ஆகும். இதில் மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசி யம்.

அரசின் நிரந்தர பணியிடங்களுக்கு கூட சட்ட விரோதமாக ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். தற்போது அரசு பல் மருத்துவக் கல்லுாரியில் 16 காலி பணி இடங்களை, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு செய்யும் துரோகம்.

எனவே, பல்மருத்துவக் கல்லுாரி பணியிடங்களை ஓய்வூதியர்களை கொண்டு நிரப்பும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us