/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புழுக்கத்தில் அவதிப்படும் கன்ட்ரோல் ரூம் போலீசார்
/
புழுக்கத்தில் அவதிப்படும் கன்ட்ரோல் ரூம் போலீசார்
ADDED : ஜூலை 20, 2025 01:29 AM
கோரிமேட்டில் ஒருங்கிணைந்த போலீஸ் வளாகம் உள்ளது. இங்கு, 7 ஆண்டிற்கு முன்பு எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் சிஸ்டம் பிரிவு, காவல் கட்டுப்பாட்டு அறையின் ஒயர்லஸ் பிரிவு துவங்கப்பட்டது. பின்னர், சைபர் கிரைம், டிராபிக் சீனியர் எஸ்.பி., அலுவலகம், ஐ.ஆர்.பி.என்., என வரிசையாக பல அலுவலகங்கள் துவங்கப்பட்டது.
இதில், ஒயர்லஸ் பிரிவு போலீஸ் துறையின் தகவல் தொடர்பு மையமாக இயங்கி வருகிறது. இங்குள்ள சாதனங்கள் எப்பொழுதும் சரியான வெப்ப நிலையில் இருக்க இப்பிரிவு முழுவதும் ஏ.சி. வசதி செய்யப்பட்டது.
இங்குள்ள 8 ஏ.சி.யில் 7 பழுதாகி விட்டது. ஒரு ஏ.சி., மட்டும் தொடர்ந்து, 24 மணி நேரம் இயங்கி கொண்டே இருப்பதால், தண்ணீர் கசிந்து அறை முழுவதும் தேங்கியுள்ளது. கண்ணாடி மூடிய அறையில் இயங்கும் இப்பிரிவில் பணியாற்றும் போலீசார் சரியான காற்றோட்ட வசதி இன்றி புழுக்கத்துடன் பணியாற்றி வருகின்றனர். ஒயர்லஸ் சாதனங்களும் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது.