தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி விமான நிலைய பாதுகாப்பு பணி காவலர்களுக்கு கூலிங் ஷீட் அறை வரவழைப்பு

புதுச்சேரி விமான நிலைய பாதுகாப்பு பணி காவலர்களுக்கு கூலிங் ஷீட் அறை வரவழைப்பு

புதுச்சேரி விமான நிலைய பாதுகாப்பு பணி காவலர்களுக்கு கூலிங் ஷீட் அறை வரவழைப்பு


ADDED : பிப் 29, 2024 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 05:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி விமான நிலைய கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்காக எட்டு பெட்டிகள் நிறுவப்பட உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தினை பொருத்தவரை லாஸ்பேட்டையில் மட்டுமே விமான நிலையம் உள்ளது.

இங்கு முதல் விமான சேவை 7.1.2013-இல் துவங்கப்பட்டது. இங்குள்ள ஓடுதளம் ஆயிரத்து 502 மீட்டர் மட்டுமே கொண்டது.இதில் தற்போதைக்கு ஏடிஆர்-48, ஏடிஆர்-78, க்யூ-400 போன்ற சிறு விமானங்கள் மட்டுமே வந்துசெல்ல முடியும்.

ஓடுதளம் 3 ஆயிரத்து 300 மீட்டர் இருந்தால்தான் பெரியரக விமானங்கள் வந்து செல்ல முடியும்.இதற்காக கூடுதலாக 1,800 மீட்டர் ஓடுதளம் அமைக்க 294 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதற்காக, விமான நிலையத்தை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளான விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகாவைச் சேர்ந்த மொரட்டாண்டி, ஆரோவில் பகுதியில் கூடுதல் நிலம் ஆர்ஜிதம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக அரசிடம் புதுச்சேரி அரசு அணுகியுள்ளது.

இதற்கிடையில்,புதுச்சேரி விமான நிலைய கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களின் வசதிக்காகஎட்டு கண்காணிப்பு பெட்டிகள்( கூலிங் ஷீட் அறை) நிறுவப்பட உள்ளது.இவை சென்னையில் இருந்து லாரி மூலம் புதுச்சேரிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது,விமான நிலையத்தை சுற்றிலும் செக்யூரிட்டி பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.இவர்கள் மழை,வெயிலில் நின்று 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.இருப்பினும் தற்போது மழை வந்தால் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் நனைந்து கொண்டே பணிபுரிய வேண்டி உள்ளது.இது தொடர்பாக ஊழியர்கள் தெரிவித்ததை அடுத்து எட்டு கண்காணிப்பு பெட்டிகள் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.

இவைபணியில் ஈடுபடும் செக்யூரிட்டி ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us