/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நுாறு நாள் வேலை திட்டத்தில் ஊழல்; காங்., தலைவர் வைத்திலிங்கம் 'பகீர்'
/
நுாறு நாள் வேலை திட்டத்தில் ஊழல்; காங்., தலைவர் வைத்திலிங்கம் 'பகீர்'
நுாறு நாள் வேலை திட்டத்தில் ஊழல்; காங்., தலைவர் வைத்திலிங்கம் 'பகீர்'
நுாறு நாள் வேலை திட்டத்தில் ஊழல்; காங்., தலைவர் வைத்திலிங்கம் 'பகீர்'
ADDED : அக் 13, 2025 06:30 AM
புதுச்சேரி; புதுச்சேரியில், நுாறு நாள் வேலை திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்., தலைவர் வைத்திலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர், கூறியதாவது;
அரசில் எந்த தவறு நடந்தாலும், அதனை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். பா.ஜ., ஆட்சிக்கு வந்தது முதல் இச்சட்ட செயல்பாட்டினை முடக்கி வைத்துள்ளது. இந்த ஆணையத்திற்கு மொத்தமுள்ள 11 ஆணையர்களில் 2 பேர் மட்டுமே உள்ளனர். மாநில அளவில் 4 லட்சம் வழக்குகளும், மேல்முறையீட்டில் 23 ஆயிரம் வழக்குகளும் நிலுவையில் உள்ளது.
நுாறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் புதுச்சேரியில் நிறைய ஊழல் நடக்கிறது. ஒரு அமைச்சர், நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களை, தனது கல்லுாரியில் வேலை செய்ய சொல்கிறார்.
பா.ஜ., நேர்மையான, வெளிப்படையான அரசை நடத்த தயாராக இல்லை. உண்மை தகவல் வெளிவரவில்லை என்றால் ஆட்சியாளர்கள் அல்லது அதிகாரிகள் கூறுவது உண்மை என்றாகிவிடும்.
தகவல் அறியும் சட்டம் கொண்டு வந்து 21ம் ஆண்டை துவங்கி இருக்கிறோம். காங்., ஆட்சி விரைவில் வரக்கூடிய நிலை உருவாகியுள்ளது. 2019ல் திருத்தப்பட்ட சட்டத்தை எங்கள் ஆட்சியில் மீண்டும் கொண்டு வருவோம்' என்றார்.
தீபாவளி தொகுப்பு
பொங்கலுக்கு கிடைக்கும்
தீபாவளி தொகுப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த காங்., தலைவர் வைத்திலிங்கம், 'நமது முதல்வர் பற்றிதான் தெரியுமே!. தீபாவளி சிறப்பு தொகுப்பு இப்போதே கொடுத்தால் வீணாகிவிடும் என்று நினைத்திருப்பார். எப்படியும் பொங்கலுக்குள் கொடுத்துவிடுவார் என்றார்.