/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி மருந்து விவகாரம் : கவர்னர் 'பளீச்'
/
போலி மருந்து விவகாரம் : கவர்னர் 'பளீச்'
ADDED : ஜன 22, 2026 05:10 AM
பாகூர்: அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், விக்ஸித் பாரத் ஜி ராம்ஜி 125 நாள் வேலை திட்டத்தின் கீழ், சோரியாங்குப்பத்தில், ரூ.27.50 லட்சத்தில், தானிய உலர் களம் மற்றும் தானியக் கிடங்கு அமைக்கும் பணியை கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, தொழிலாளர்கள் கொடுத்த சிறுவள்ளி கிழங்கினை சாப்பிட்டு ருசி பார்த்து, அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.
செயலர் கிருஷ்ண மோகன் உப்பு, திட்ட இயக்குனர் மாணிக்தீபன், வட்டார வளர்ச்சி அதிகாரி சவுந்தரி, செயற் பொறியாளர் சித்ரா, பாகூர் கொம்யூன் ஆணையர் சதாசிவம், வட்டார வளர்ச்சி உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவப்பிரகாசம் உடனிருந்தனர்.
கவர்னர் ஆய்வின்போது, அதேபகுதியை சேர்ந்த விவசாயி தாமோதரன், வேளாண் துறை மானியத்தில் வழங்கிய வேர்க்கடலை விதைகள் முளைப்பு திறன் சரியாக இல்லை என்றதும், இது குறித்து விசாரிப்பதாக கவர்னர் கூறினார்.
தொடர்ந்து பாகூரை சேர்ந்த மணிவண்ணன் என்பவர், போலி மருந்து விவகாரத்தில் அதிகாரிகள் தான் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசியல்வாதிகள் கைதாகவில்லையே என்றதும், குறுக்கிட்ட கவர்னர் அந்த வழக்கு சி.பி.ஐ., விசாரணையில் உள்ளது. நான் இங்கு அரசியல் செய்ய வரவில்லை. மக்களை பார்க்கத் தான் வந்துள்ளேன்' என்றார்.

