தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாண்டி ஓஷன் பார்க்கில் கிராமிய இசை நடன நிகழ்ச்சி

பாண்டி ஓஷன் பார்க்கில் கிராமிய இசை நடன நிகழ்ச்சி

பாண்டி ஓஷன் பார்க்கில் கிராமிய இசை நடன நிகழ்ச்சி


ADDED : ஜன 02, 2025 06:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2025 06:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாண்டி ஓஷன் பார்க்கில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஒரு நாள் முழுதும் கிராமிய இசையுடன் கூடிய நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையத்தில் பாண்டி ஓஷன் பார்க் உள்ளது. இங்கு, ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக, நேற்று முன்தினம் நாள் முழுதும் கரகாட்டம், மயிலாட்டம், மானாட்டம், பறை இசை உள்ளிட்டவை நடந்தது. ஓஷன் பார்க் வந்த சுற்றுலா பயணிகள், கிராமிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

பாண்டி ஓஷன் பார்க் நிர்வாக இயக்குநர் அன்பு கூறுகையில், 'ஆங்கில புத்தாண்டை வரவேற்க டி.ஜே., கிளாசிக்கல் இசையுடன் கூடிய நடன நிகழ்ச்சிகள் நடந்தது. அதில், கிராமிய கலைகள் மூலம் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஒரு நாள் முழுதும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

இதன் மூலம் மறைந்து வரும் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கும் விதமாக இத்தகைய இசையுடன் கூடிய நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us