/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தம்பதியை தாக்கி கொலை மிரட்டல்
/
தம்பதியை தாக்கி கொலை மிரட்டல்
ADDED : நவ 21, 2025 06:00 AM
புதுச்சேரி: தம்பதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
லாஸ்பேட்டை, குமரன் நகரை சேர்ந்தவர் சேகர், 41; டிராவல்ஸ் டிரைவர். இவர், டிராவல்ஸ் வண்டியை சாஸ்திரி நகர், 2வது தெருவில் உள்ள ெஷட்டில் நிறுத்துவது வழக்கம்.
நேற்று முன்தினம் மாலை ெஷட்டில் உள்ள டிராவல்ஸ் வண்டியை எடுக்க அவர் மனைவி கனகாவுடன் சென்றார்.
அப்போது ெஷட்டுக்கு எதிர் வீட்டில் வசிக்கும் குமரவேல் 43, அவரது மனைவி லட்சுமி 40, உள்ளிட்ட மூன்று பேர், முன் விரோதம் காரணமாக சேகர், கனகாவை திட்டி, கட்டையால் தாக்கினர்.பின், கத்தியால் இருவரையும் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.
சேகர் புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

