தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரூ.7 லட்சம் மோசடி தம்பதிக்கு வலை

ரூ.7 லட்சம் மோசடி தம்பதிக்கு வலை

ரூ.7 லட்சம் மோசடி தம்பதிக்கு வலை


ADDED : ஆக 20, 2025 07:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2025 07:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : தனியார் கம்பெனி ஊழியரிடம் ரூ.7 லட்சம் சீட்டு பணம் தராமல் ஏமாற்றிய தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.

அபிஷேகப்பாக்கம், கெங்கையம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபாகரன்,38; தனியார் கம்பெனி ஊழியர். இவர், பூமியான்பேட்டை, ஜவகர் நகர், மதியழகன் மனைவி கிரிஜா,40; என்பவரிடம் கடந்த 2017ம் ஆண்டு ஏப்., முதல் ரூ.6 லட்சத்திற்கு இரண்டு ஏலச்சீட்டு கட்டி வந்தார்.

அதில், ஏலச்சீட்டின் கடைசி 2 சீட்டுகளை கடந்த 2019ல் பிரபாகரன் எடுத்த நிலையில், அதற்கான பணம் ரூ. 12 லட்சத்தை கிரிஜா மற்றும் அவரது கணவர் மதியழகன் தராமல் காலம் கடத்தி வந்தனர். இரண்டு மாதத்திற்கு பிறகு ரூ. 5 லட்சத்தை கொடுத்தனர். மீதமுள்ள ரூ. 7 லட்சத்தை, கிரிஜா தனது கணவர் மதியழகன் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் வரும் சேமிப்பு தொகையில் இருந்து கொடுப்பதாக கூறினார். இந்நிலையில், இருவரும் திடீரென தலைமறைவாகிவிட்டனர்.

இதுகுறித்து பிரபாகரன் அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள தம்பதியை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us