/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.ஆர்.காங்., பிரமுகரை விசாரிக்க கோர்ட் அனுமதி
/
என்.ஆர்.காங்., பிரமுகரை விசாரிக்க கோர்ட் அனுமதி
ADDED : டிச 13, 2024 06:24 AM

காரைக்கால்: கோவில் நில மோசடி வழக்கில் சரணடைந்த என்.ஆர்.கா்., பிரமுகரை போலீஸ் காவலில் 6 நாள் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவில் நில மோசடி வழக்கில் சப் கலெக்டர் ஜான்சன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான என்.ஆர்.காங்., பிரமுகர் ஆனந்த் கடந்த 5ம் தேதி கோர்ட்டில் சரணடைந்தார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காரைக்கால் போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி வரதராஜன், ஆனந்தை 6 நாட்கள் அதாவது வரும் 16ம் தேதிவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
அதனையொட்டி, எஸ்.பி., சுப்ரமணியன் தலைமையிலான தனிப்படை போலீசார், ஆனந்தை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

