/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி வளாகத்தில் மாடுகள் : மாணவிகள் அச்சம்
/
பள்ளி வளாகத்தில் மாடுகள் : மாணவிகள் அச்சம்
ADDED : ஏப் 22, 2025 04:30 AM

புதுச்சேரி: பள்ளி வளாகத்தில் மாடுகள் நுழைவதால் மாணவிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியின் வெளிப்பகுதியில், சுற்றி திரியும் மாடுகளால், விபத்து நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். சாலையில் நிற்கும் மாடுகள், பள்ளி வளாகதிற்குள் நுழைந்து நிழல் பகுதியான மரங்கள், கட்டடங்கள் அருகே படுத்து ஓய்வெடுக்கின்றன.
இதனால் மதிய நேரத்தில் மாணவிகள் மரத்தடியில் உட்கார்ந்து, சாப்பிடுவதற்கு அச்சமடைந்து வருகின்றனர். பள்ளி ஊழியர்கள் மாடுகளை விரட்டி விட்டாலும், திரும்பவும், பள்ளி வளாகத்தினுள் மாடுகள் வருகின்றன. எனவே நகராட்சி அதிகாரிகள் மாட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.