UPDATED : ஆக 11, 2026 04:32 PM
ADDED : ஆக 11, 2026 04:10 PM
புதுச்சேரி: இந்திரா நகர், கதிர்காம் தொகுதிகளில் இந்திய கம்யூ., சார்பில் நாடு தழுவிய மக்கள் சந்திப்பு நடைப்பயண இயக்கம் நடந்தது.
இந்திய கம்யூ., மூலம் மத்திய பா.ஜ., அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நாடு தழுவிய மக்கள் சந்திப்பு நடைபயண பிரசார இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்திரா நகர், கதிர்காமம் தொகுதி குழு சார்பில் முத்திரையர்பாளையம் ஜீவா மன்றம் அருகே துவங்கிய மக்கள் சந்திப்பு நடைப்பயண இயக்கத்திற்கு தொகுதி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். சீனிவாசன், மூர்த்தி, விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர்.
நடைப்பயண இயக்கத்தை மாநில செயலாளர் சலீம் துவக்கி வைத்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் நாரா. கலைநாதன் பிரசார இயக்கத்தினை கதிர்காமம் தொகுதி மாரியம்மன் நகர் பகுதியில் முடித்து வைத்து பேசினார்.
இதில், 30க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
