/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காந்தி சிலை நிழற்குடை துாண்களில் விரிசல்
/
காந்தி சிலை நிழற்குடை துாண்களில் விரிசல்
ADDED : டிச 06, 2024 06:48 AM

புதுச்சேரி : காந்தி சிலையின் நிழற்குடை துாண்கள் இரண்டில் விரிசல் ஏற்பட்டு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
புதுச்சேரியின் அடையாளங்களில் ஒன்று கடற்கரைசாலையில் உள்ள காந்தி சிலை. 13 அடி உயரம் உள்ள இந்த சிலை ஆசியாவிலேயே மிகப்பெரிய காந்தி சிலையாக கருதப்படுகிறது. இது பிரபலமான சிற்பி ராய் சவுத்ரியால் வடிவமைக்கப்பட்டது. இந்த சிலை கடந்த 1965ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி நிறுவப்பட்டது.
காந்தி சிலையை சுற்றி ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்டமான எட்டு துாண்கள், நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் காந்தி சிலையை மழை, வெய்யலில் இருந்து பாதுகாக்க வெண்ணிறத்தில் ராட்ச நிழற்குடையும் ஐந்து சிறிய துாண்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதில், முன்பக்கத்தில் உள்ள இரண்டு துாண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்த விரிசல் அதிகரித்து வருவதால், அதனை பார்த்து சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அச்சமடைகின்றனர். காந்தி சிலையை சுற்றி நிறைய குழந்தைகள் விளையாடுகின்றன. விபரீதம் ஏற்படும் முன் துாண்களின் உறுதிதன்மையை சோதித்து பலப்படுத்த வேண்டும்.