/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவேகானந்தா கல்லுாரியில் கைவினை பயிற்சி பட்டறை
/
விவேகானந்தா கல்லுாரியில் கைவினை பயிற்சி பட்டறை
ADDED : நவ 17, 2025 02:52 AM

புதுச்சேரி: புதுச்சேரி,விவேகானந்தா கல்வியியல் கல்லுாரியில் கைவினை களிமண் (டெரகோட்டா) பயிற்சி பட்டறை நடந்தது.
டெரகோட்டா நிபுணர் முனுசாமி தலைமை தாங்கி, மாணவர்களுக்கு களிமண் உருவாக்கும் முறைகள், வடிவமைப்பு நுட்பங்கள் மற்றும் பாரம்பரிய கைவினை கலைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
கல்லுாரி முதல்வர் சிங்காரவேலு வழிகாட்டுதல் படி, நுண்கலைத் துறை உதவி பேராசிரியர் ஜெயந்தி, ஒருங்கிணைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது.இதில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, களிமண்ணைக் கையாளுதல் மற்றும் வடிவமைத்தல் குறித்து அனுபவம் பெற்றனர். மாணவர்கள் பல்வேறு சிற்பங்கள், சிறு பொம்மைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் என, 200க்கும் மேற்பட்ட டெரகோட்டா பொம்மைகளை தயாரித்தனர்.
மாணவர்கள் தயாரித்த பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டன.

