ADDED : அக் 18, 2026 12:33 AM

புதுச்சேரி: செல்லப்பெருமாள்பேட்டை விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளியில், அறிவியல், ஓவியம் மற்றும் கைவினைப் பொருள் கண்காட்சி நடந்தது.
கண்காட்சியை, பள்ளி தாளாளர் செல்வகணபதி எம்.பி., முதன்மை முதல்வர் பத்மா, விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் கீதா, விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி முதல்வர் மீனாட்சி ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.
கண்காட்சியில், எல்.கே.ஜி., முதல் 11ம் வகுப்பு மாணவ மாணவியரின், மொத்தம் 700க்கும் மேற்பட்ட படைப்புக்கள் இடம் பெற்றன. அறிவியல் மட்டுமின்றி, தமிழ், கணிதம், சமூக அறிவியல், ஆங்கிலம் ஆகிய தலைப்புகளிலும் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.
மாணவர்கள் தங்கள் மாதிரிப் படைப்புகளின் இயக்கமுறை குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கினர். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியம், கைவினைப் பொருட்கள் பார்வையாளர்களை கவர்ந்தன. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
