/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடன் மற்றும் வைப்புநிதி விழிப்புணர்வு பிரசுரம்
/
கடன் மற்றும் வைப்புநிதி விழிப்புணர்வு பிரசுரம்
ADDED : அக் 06, 2024 04:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி பாரதியார் கிராம வங்கி சார்பில், கடன் மற்றும் வைப்புநிதி தொடர்பாக துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
புதுவை பாரதியார் கிராம வங்கி தலைமை அலுவலகம் சார்பில், கடன் மற்றும் வைப்பு நிதி தொடர்பாக, பொதுமக்களுக்கு விழிப்புணவுர் ஏற்படுத்தும் வகையில், துண்டு பிரசுரம் வழங்கினர்.
கடற்கரை சாலையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, புதுவை பாரதியார் கிராம வங்கி தலைவர் ரத்தினவேல் துவக்கி வைத்து, துண்டு பிரசுரம் வழங்கினார். வங்கி பொது மேலாளர் கணபதி முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு நிகழ்ச்சியில், வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.