/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிரிக்கெட் அசோசியேஷன் ஆண்டு விழா
/
கிரிக்கெட் அசோசியேஷன் ஆண்டு விழா
ADDED : மார் 30, 2025 03:52 AM

புதுச்சேரி : கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரியின் 22 வது ஆண்டு விழா சி.ஏ.பி., சீகெம் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.
சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவர், வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் ஐசரி கணேஷ்,கேரளா கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் ஜெயேஷ் ஜார்ஜ், செயலாளர்வினோத் குமார், முதன்மை பொருளாளர் மினு சிதம்பரம், முன்னாள் செயலாளர் ஸ்ரீஜித் நாயர், துபாய் மின்சாரம் மற்றும் தண்ணீர் குழுமத்தின் உறுப்பினர் விஜயன் ஐயப்பன் சிறப்புரையாற்றினர்.
விழாவில், கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரியின் தலைவர் தாமோதரன், செயலாளர் ராமதாஸ், முன்னாள் செயலாளர் சந்திரன், சீகெம் நிறுவனத்தின் தலைவர் பத்மா தாமோதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
100 ரஞ்சி போட்டிகள் ஆடிய வீரர் அருண் கார்த்திக், புதுச்சேரி அணியின் கேப்டன் ரோஹித் அறிமுக உரையாற்றினர். விழா மலரை ஐசரி கணேஷ் வெளியிட்டார்.
தொடர்ந்து கடந்தாண்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
12, 14,16 வயதிற்குட்பட்ட இன்டெர் அகாடெமி தொடரில் ஜகத் கிரிக்கெட் அகாடமி கோப்பையை வென்றது.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.