/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிரிக்கெட் அணி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்
/
கிரிக்கெட் அணி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : பிப் 09, 2025 06:17 AM
புதுச்சேரி: பாண்டிச்சேரி ரூரல் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான அணி உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
புதுச்சேரி, கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் பயன்பெறும் வகையில் பாண்டிச்சேரி ரூரல் பிரிமியர் லீக்-2025 போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு போட்டிக்கான வீரர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி வரும் மார்ச் 1ம் தேதி சன்வே ஹோட்டலில் நடக்கிறது.
முன்னதாக, போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதன்படி, சூர்யா குரூப்ஸ் ஸ்பார்டன்ஸ் அணியின் சம்பத், நேயம் அணியின் வேல்முருகன், விபிஜியோர் லெஜெண்ட்ஸ் அணியின் ரகு, லியோ வாரியர்ஸ் அணியின் பார்த்திபன், லப் சோல்டட்ஸ் அணியின் அமுதவாணன், யூத் சாம்பி யன்ஸ் அணியின் ஆனந்த் பாபு, ட்ரோபி கிங்ஸ் அணியின் சரவணன், பாண்டி சூப்பர் கிங்ஸ் அணியின் சாந்தமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை பாண்டிச்சேரி ரூரல் பிரீமியர் லீக் குழுவை சேர்ந்த தென்னவன், கனகராஜ், ராஜகவி, அன்பரசன், சர்பஸ்ரீ, இளங்கோவன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
கூட்டத்தில், கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள், பாகூர் பிரீமியர் லீக் இன்ஸ்டாகிராம் பேஜ் பாலோ செய்து, அதில் உள்ள லிங்க் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

