/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் கடந்த ஆண்டு குற்ற சம்பவங்கள் குறைவு
/
புதுச்சேரியில் கடந்த ஆண்டு குற்ற சம்பவங்கள் குறைவு
புதுச்சேரியில் கடந்த ஆண்டு குற்ற சம்பவங்கள் குறைவு
புதுச்சேரியில் கடந்த ஆண்டு குற்ற சம்பவங்கள் குறைவு
ADDED : ஜன 11, 2025 06:23 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 2023ம் ஆண்டை ஒப்பிடும்போது, கடந்தாண்டு கொலை, வழிப்பறி குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளது என சீனியர் எஸ்.பி., கலைவாணன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது;
புதுச்சேரியில் ரோந்து பணியை தீவிரப்படுத்த அவசர கால உதவிக்கு பயன்படுத்தும் 4 வாகனங்களும் ரோந்து பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர். அனைத்து போலீஸ் நிலையத்திலும் பீட், மொபைல் பேட்ரோல் தீவிரப்படுத்தப்படும். கடந்த ஆண்டு 2023 ஆண்டை காட்டிலும் கடந்த ஆண்டு கொலை, வழிப்பறி குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது.
சிறிய அடிதடி, தகராறு வழக்குகள் அதிகம் பதிவாகி உள்ளது.
குற்றச்சம்பவம் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகன பதிவு செய்யும் வழக்குகள் 2 மடங்காக அதிகரித்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு முன்னெச்சரிக்கை வழக்குகள் 2000 ஆக பதிவானது.
ஆனால், கடந்த 2024ம் ஆண்டு இந்த வழக்குகள் 4,000 உயர்ந்துள்ளது. இதுதவிர, 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய பரிந்துரை செய்துள்ளோம். போதை பொருள் கடத்தலில் ஈடுப்படுவர்கள் மீதும் போதை பொருள் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என, கூறினார்.