ADDED : அக் 18, 2026 12:55 AM
5 பேர் கைது: சேதராப்பட்டு பிப்டிக் தொழிற்பேட்டையில் தனியார் கம்பெனி அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட வானுாரை சேர்ந்த அஜித்குமார், 25; என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், அதேப்பகுதியில் மற்றொரு தனியார் கம்பெனி அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட அகசம்பட்டைச் சேர்ந்த குப்புசாமி, 50; கைது செய்தனர்.
காலாப்பட்டு:
பெரியகாலாப்பட்டு முருகன் கோவில் அருகே போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த தென்சிறுவாலுாரைச் சேர்ந்த ஆகாஷ், 22; என்பவரை காலாப்பட்டு போலீசார் கைது செய்தனர்.
திருக்கனுார்: கே.ஆர்.பாளையம் புளியந்தோப்பில் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த பொம்பூரைச் சேர்ந்த மூவேந்தன், 26; சுபாஷ், 26; ஆகியோரை திருக்கனுார் போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்: உறுவையாறு மெயின் ரோட்டில் உள்ள பழைய பெட்ரோல் பங்க் அருகே குடிபோதையில் மக்களிடம் தகராறில் ஈடுபட்ட துப்ராயப்பேட்டையை சேர்ந்த வீரன், 29; மங்கலம் போலீசார் கைது செய்தனர்.
காட்டேரிக்குப்பம்: லிங்காரெட்டிப்பாளையம் 4 முனை சாலை சந்திப்பில் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த திண்டிவனம், தென்பசியார் பகுதியை சேர்ந்த சண்முகபாண்டியன், 27; என்பவரை காட்டேரிக்குப்பம் போலீசார் கைது செய்தனர்.
