தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஸ்பா புரோக்கர்களுடன் கிரைம் போலீஸ் பார்ட்டி

ஸ்பா புரோக்கர்களுடன் கிரைம் போலீஸ் பார்ட்டி

ஸ்பா புரோக்கர்களுடன் கிரைம் போலீஸ் பார்ட்டி


ADDED : நவ 17, 2024 02:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2024 02:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம், சீனியர் எஸ்.பி., கலைவாணன் இருவரும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். கள்ள லாட்டரி சீட்டு விற்பனை, விபரசாரம், ரவுடிகள் செயல்பாடுகளை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ரவுடிகள் நடமாட்டம், கள்ள லாட்டரி, விபசாரம் உள்ளிட்டவற்றை போலீஸ் நிலைய கிரைம் போலீசாரே கண்காணித்து வருகின்றனர். ஒரே போலீஸ் நிலையத்தில் 3 முதல் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் கிரைம் போலீசார் சிலர் உள்ளூர் ரவுடிகள், விபசார கும்பலுடன் தொடர்பில் உள்ளனர். இதனால் போலீஸ் உயர் அதிகாரிகள் ரெய்டு, கைது செய்ய உத்தரவிட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட ரவுடி, விபசார கும்பலுக்கு தெரிந்து விடுகிறது. உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்தாலும், சிலரின் சுயநலத்தால் ரவுடிகள், விபசார கும்பல் தப்பி விடுகிறது.

சமீபத்தில் கூட தீபாவளி பண்டிகைக்கு முன்பு நகரின் மையப்பகுதியில் அதிக வியாபார நிறுவனங்களுடன் நேரான வீதியில் உள்ள போலீஸ் நிலைய கிரைம் போலீசார் ஸ்பா புரோக்கர்களுடன் வார இறுதி நாட்களில் ஓட்டல் அறைகளில் குடித்து கும்மாளமிடும் தகவல் கசிய துவங்கி உள்ளது.

இது நிலைய பொறுப்பாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. திறமையான பல போலீசார் சட்டம் ஒழுங்கு பிரிவில் உள்ளனர். அவர்களை போலீஸ் நிலைய கிரைம் குழுவில் சேர்க்க சீனியர் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us