/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தல் ஆணையத்தை குறை கூறுவதா? காங்., தலைவருக்கு அன்ழகன் கண்டனம் காங்., தலைவருக்கு அன்ழகன் கண்டனம்

ADDED : நவ 07, 2025 07:10 AM
புதுச்சேரி: தேர்தல் ஆணையத்தின் மீது பொய் குற்றச்சாட்டை கூறிய காங்., தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை:
தேர்தல் ஆணைய உத்தரவின்படி, புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில், விருப்பம் இருப்பினும் அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி முகவர்கள், ஓட் டுச் சாவடி அலுவலர்களுடன் உடன் செல்லலாம்.
அதன்படி நேற்று முன்தினம் லாஸ்பேட்டை தொகுதியில், வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவம் கொடுக்கும் பணியில், ஓட்டுச்சாவடி அலுவலர்களுடன் பா.ஜ., என்.ஆர்.காங்., மற்றும் அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் சென்றுள்ளனர் .
இது மிகப் பெரிய குற்றம் போன்றும், ஓட்டு திருட்டு நடப்பதாக காங்., தலைவர் வைத்திலிங்கம் தேர்தல் ஆணையம் மீது குற்றம் சாட்டியுள்ளது கண்டிக்கத்தக்கது. பொய் குற்றச்சாட்டை கூறியுள்ள காங்., தலைவர் வைத்திலிங்கம் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.