/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புவனகிரி குளத்தில் முதலை பிடிபட்டது
/
புவனகிரி குளத்தில் முதலை பிடிபட்டது
ADDED : அக் 20, 2024 05:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவுனகிரி : புவனகிரி அருகே ஆதிவராகநல்லுாரில், குளத்தில் இருந்த ஐந்து கிலோ எடையுள்ள முதலைக்குட்டியை வனத்துறையினர் பிடித்து வக்காரமாரி ஏரியில் விட்டனர்.
புவனகிரி அடுத்த ஆதிவராகநல்லுார் குளத்தில் அப்பகுதியை சேர்ந்த சிலர் குளிக்க சென்றபோது முதலைக்குட்டி இருந்ததை பார்த்து அச்சமடைந்னர்.
தகவலின் பேரில் சிதம்பரம் வனத்துறையினர் பாரஸ்ட்டர் பன்னீர்செல்வம், கார்டு ஞானசேகரன் உள்ளிட்டோர் வந்து பொதுமக்கள் உதவியுடன், வலை வைத்து பிடித்தனர்.
ஐந்து கிலோ எடையுள்ள முதலைக்குட்டியை சிதம்பரம் அருகில் உள்ள வக்காரமாரி ஏரியில் விட்டனர்.