/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கரும்பு விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி மானியம்
/
கரும்பு விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி மானியம்
ADDED : மார் 08, 2026 03:44 AM
புதுச்சேரி: கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ரூ.87.23 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் தேனீ ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;
வேளாண் துறை சார்பில், மாநிலத்தில் விவசாயிகள் பயிர் செய்யும் நெல், கரும்பு, பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களுக்கு, பண்ணை செலவினங்களை சற்றே ஈடுகட்டும் வகையில் பயிர் உற்பத்தி ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், கடந்த 2024 -25ம் ஆண்டு, புதுச்சேரி பிராந்தியத்தில் கரும்பு சாகுபடி செய்த 346 பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 10 ஆயிரம் வீதம் 84 லட்சத்து 27 ஆயிரத்து 600 ரூபாயும், 14 அட்டவணை இன விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ. 11 ஆயிரம் வீதம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 680 ரூபாய் பயிர் உற்பத்தி ஊக்கத் தொகை நாளை 9ம் தேதி அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது. விவசாயிகள் தங்களது வங்கி கணக்கில் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்து கொள்ளவும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

