/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஸ் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்
/
பஸ் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்
ADDED : ஜன 02, 2024 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி ; புத்தாண்டு கொண்டாட்டதிற்கு பின் விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வதற்கு புதுச்சேரி பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை தினத்தை கழிப்பதற்காக வெளிமாநிலங்களிலிருந்து அதிகளவில் புதுச்சேரிக்கு வந்து குவிந்தனர். நேற்று விடுமுறை முடிந்த நிலையில் சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்ல பயணிகள் பஸ் நிலையத்தில் பெருமளவு குவிந்தனர்.
பயணிகள் பஸ்சில் ஒரே நேரத்தில் முண்டியடித்து ஏறி சீட் பிடிப்பதில் போட்டா போட்டி ஏற்பட்டது.
பஸ்சில் இடம் கிடைக்காமல் பலர் நின்றபடியும், படியில் உட்கார்ந்தும் பயணம் செய்தனர்.

