/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சண்டே மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்
/
சண்டே மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்
ADDED : ஜன 12, 2026 03:55 AM

புதுச்சேரி: பொங்கல் பண்டிக்கைக்கு 2 நாட்களே உள்ள நிலையில், சண்டே மார்க்கெட் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
புதுச்சேரி சண்டே மார்க்கெட் என்பது வாரந்தோறும் ஞாயிற்று கிழமைகளில் காந்தி வீதியில் நடக்கும் சந்தை. இங்கு, குண்டூசி முதல் உயர் ரக துணிகள் வரை அனைத்தும் கிடைக்கும். நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை அமைத்து வியாபாரம் செய்கின்றனர். பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்கு தேவையான புது துணிகள் பொருட்களை பொதுமக்கள் வாங்க துவங்கி விட்டனர்.
பொங்கல் பண்டிக்கைக்கு 2 நாட்கள் உள்ள நிலையில் நேற்றைய சண்டே மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. புதுச்சேரி மட்டும் இன்றி கடலுார், விழுப்புரம், திண்டிவனம் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களின் குழந்தைகளுடன் துணிகள் வாங்க சண்டே மார்க்கெட்டில் குவிந்தனர். காந்தி வீதி முழுதும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

