தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொடர் விடுமுறையால் படகு குழாமில் மக்கள் கூட்டம்

தொடர் விடுமுறையால் படகு குழாமில் மக்கள் கூட்டம்

தொடர் விடுமுறையால் படகு குழாமில் மக்கள் கூட்டம்


ADDED : ஏப் 01, 2025 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2025 04:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: தொடர் விடுமுறையையொட்டி, நோணாங்குப்பம் படகு குழாமில் நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.

புதுச்சேரிக்கு வெளி மாநிலங்களில் வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து விட்டு செல்கின்றனர். ஒவ்வொரு வார விடுமுறையான சனி, ஞாயிறு ஆகிய தினங்களில், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதி வருகிறது. சுற்றுலா பயணிகள் மூலம், ஒவ்வொரு வாரத்தில், சுற்றுலாத்துறைக்கு பல லட்சம் ரூபாய் வருமானம் வருகின்றது.

ஆனால், பாரடைஸ் பீச்சில், சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்து வருகிறது. கடந்த மழை வெள்ளத்தில், படகு குழாமில் இருந்த 5 படகுகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. அதில், இரண்டு படகுகள், மரக்காணம் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற மூன்று படகுகள் மாயமானது.

இந்நிலையில், சுற்றுலா வரும் பயணிகளுக்கு போதிய படகுகள் இல்லாமல் இப்பதால், நீண்ட வரிசையில், காத்திருந்து படகு சவாரி செய்யும் நிலை இருந்து வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து செலவு செய்து வரும், பயணிகளை காத்திருக்காமல், படகு சவாரி செய்வதற்கும் மேலும், கூடுதலாக படகுகளை இயக்குவதற்கும், சுற்றுலாத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us