/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சண்டே மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
/
சண்டே மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
ADDED : அக் 21, 2024 06:09 AM

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொருட்கள் வாங்க சண்டே மார்க்கெட்டில் நேற்று பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.
புதுச்சேரி நகரப்பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் சண்டே மார்க்கெட் நடக்கிறது. வீட்டிற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.
புதுச்சேரி நகரின் மிக முக்கிய வீதியான காந்தி வீதி, நேரு வீதியின் இருபுறமும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு ஒருநாள் மட்டும் வியாபாரம் செய்யப்படுகிறது.
இங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் சண்டே மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தற்போது தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு, உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியில் இருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வந்து தேவையான பொருட்களை வாங்க சண்டே மார்க்கெட்டில் மக்கள் அதிகளவில் நேற்று குவிந்தனர்.

