தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பத்திரப்பதிவு அலுவலகங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

 பத்திரப்பதிவு அலுவலகங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

 பத்திரப்பதிவு அலுவலகங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்


ADDED : ஜன 29, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 05:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முகூர்த்த தினம் என்பதால் புதுச்சேரி பத்திரப்பதிவு அலுவலகங்களில் நேற்று பத்திர பதிவு செய்ய மக்கள் கூட்டம் அலைமோதியது.

புதுச்சேரி சாரத்தில் உள்ள பத்திரப்பதிவாளர் அலுவலகம், உழவர்கரை, வில்லியனுார், பாகூர், திருக்கனுார் ஆகிய நான்கு இடங்களில் துணை பதிவாளர் அலுவலகம், இதேபோன்று காரைக்காலில் -3, மாகியில் - 2, ஏனாமில் - 1, என, மொத்தம் 11 பத்திரப்பதிவு அலுவலகங்கள் மாநிலத்தில் உள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் வளர்பிறை முகூர்த்த தினம் நேற்று என்பதால் புதுச்சேரியில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திர பதிவு செய்ய மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஒரே நேரத்தில் மக்கள் குவிந்ததால் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திண்டாடினர்.

இந்நிலையில், உழவர்கரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று 100 பேருக்கு மேல் பத்திரம் பதிவு செய்ய காலையிலிருந்து காத்திருந்தனர். இதில், நேற்று முன்தினம் பாக்கியிருந்த பத்திரங்கள் உள்பட நேற்று 70 பத்திரங்கள் மாலை 6:00 மணி வரை பதியப்பட்டது. மாலை 6:00 மணிக்கு மேல் பத்திரப்பதிவு கணினியில் செய்ய முடியாததால், காத்திருந்தவர்கள் பெரும் அவதி அடைந்தனர். விடுபட்டவர்களுக்கு இன்று பத்திரப்பதிவு செய்யப்பட உள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் புதுச்சேரி மாநிலத்தில் 400க்கும் மேற்பட்ட பத்திரப் பதிவுகள் நடந்தது.

இதில் பல கோடி ரூபாய் வருவாய் அரசுக்கு கிடைத்திருக்கும். ஆனால் கூடுதல் பதிவாளர்களை பதிவகங்களில் நியமிக்காமல் புதுச்சேரி அரசு அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் பொதுமக்கள் தங்கள் விரும்பிய நாட்களில் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் அவதி அடைகின்றனர் என, பொதுமக்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us