/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அலைமோதிய மக்கள் கூட்டம்
/
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அலைமோதிய மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அலைமோதிய மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அலைமோதிய மக்கள் கூட்டம்
ADDED : அக் 20, 2025 12:32 AM

புதுச்சேரி: தீபாவளி பண்டிகைக்கு பொருட்களை வாங்க மக்கள் குவிந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் துணிகள், மளிகை, பட்டாசு உள்ளிட்ட பொருட்களை வாங்க நேற்று நகரத்தின் முக்கிய வீதிகளில் குவிந்தனர். இதனால், காமராஜர் சாலை, அண்ணா சாலை,நேரு வீதி, காந்தி வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் மதியத்திற்கு பின், கடைகளுக்கு வரத்தொடங்கினர். இதனால் கடைகளிலும் முக்கிய சாலைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நடந்து செல்லகூட முடியாத அளவிற்கு மக்களின் கூட்டம் இருந்தது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிந்தனர்.