UPDATED : அக் 06, 2026 04:08 AM
ADDED : அக் 06, 2026 01:44 AM

புதுச்சேரி: புதுச்சேரி, ஜிப்மர் மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சைத் துறை, நோயாளிகளுக்கான சிறப்பு வலி மேலாண்மை சேவைகளை வலுப்படுத்தும் வகையில், மேம்பட்ட கிரையோ அனல்ஜீசியா பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
புதிய பிரிவை ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் சாகா வினோத் குமார் துவக்கி வைத்தார். மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சைத் துறைத் தலைவர் சத்யன் பரிதா, சென்னையை சேர்ந்த வலி மேலாண்மை டாக்டர் பிரேம்குமார், துறை பேராசிரியர்கள், முதுநிலை டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், பேசிய ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் சாகா வினோத் குமார், மேம்பட்ட சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஜிப்மரில் சிறப்பு நோயாளி பராமரிப்பு சேவைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றார். கிரையோஅனல்ஜீசியா பிரிவு துவங்கப்பட்டிருப்பது, பல்துறை மற்றும் மேம்பட்ட வலி மேலாண்மையில் ஜிப்மரின் மருத்துவத் திறன்களை மேலும் வலுப்படுத்தும்.
