தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதைப் பொருள் விற்ற கடலுார் வாலிபர் கைது

போதைப் பொருள் விற்ற கடலுார் வாலிபர் கைது

போதைப் பொருள் விற்ற கடலுார் வாலிபர் கைது


ADDED : ஜன 14, 2025 11:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2025 11:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ரெட்டியார்பாளையத்தில் மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனை செய்த கடலுார் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் வில்லியனுார் மெயின்ரோட்டில் ரோந்து சென்றனர். இரவு 10:30 மணிக்கு, வில்லியனுார் நோக்கி பைக்கில் சென்ற சந்தேகத்திற்குரிய வாலிபரை நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் வாலிபர் வேகமாக புறப்பட்டார்.

அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில், கடலுார் சுபஉப்பலவாடி, மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் சிலம்பரசன் (எ) சிம்பு, 30; என தெரியவந்தது. அவரிடம் நடத்திய சோதனையில் 6 சிறிய பிளாஸ்டிக் பைகளில் மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள், சிரிஞ்ச் ஆகியவற்றை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது.

சிலம்பரசனை கைது செய்து, 6 கிராம் மெத்தபெட்டைமன் மற்றும் மொபைல்போன், ரூ.2500, சிரஞ்சுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us