/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது இடத்தில் ரகளை கடலுார் வாலிபர் கைது
/
பொது இடத்தில் ரகளை கடலுார் வாலிபர் கைது
ADDED : ஜன 15, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர், : பொது இடத்தில் ரகளை யில் ஈடுபட்ட கடலுார் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கிருமாம்பாக்கம் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது, புதுச்சேரி - கடலுார் சாலை முள்ளோடை சந்திப்பில் ஒருவர் பொதுமக்களை ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், கடலுார் குண்டு உப்பலவாடியை சேர்ந்த ராஜேஷ், 34; என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.