/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கட்டுமான பொருட்களை சாலையில் குவிக்க கூடாது உழவர்கரை ஆணையர் எச்சரிக்கை

ADDED : அக் 18, 2024 11:16 PM
புதுச்சேரி: அனுமதி பெறாமல் சாலை, வாய்க்காலில் கட்டுமான பொருட்களை குவித்து பணிகளை மேற்கொண்டால் புகார் அளிக்கலாம் என, உழவர்கரை நகராட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வடகிழக்கு பருமழை தொடங்கியுள்ள சூழ்நிலையில், சாலையில் மழை நீர் தேங்காமல் இருக்க உழவர்கரை நகராட்சி உட்புற வாய்க்கால் அனைத்தையும் துார்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது.
இருப்பினும் குப்பைகள், கட்டுமான பொருட்களை சாலைகள், வாய்க்காலில் கொட்டி வருகின்றனர். இதனால் மழை நீர் வடிவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும்போது, சாலை, வாய்க்காலுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் மேற்கொள்ளலாம்.
இதேபோல் பல கட்டுமானங்கள் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கவனத்திற்கு வந்துள்ளது. அதை முறைப்படுத்தி கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. அனுமதி பெறாமல், போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கட்டுமானங்களை மேற்கொண்டால், நகராட்சியின் 75981--71674 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.