ADDED : டிச 16, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : இந்திய - வியட்நாம் நட்புறவு கழகம், அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் சார்பில், 12வது வியட்நாம் - இந்திய கலாசார திருவிழா, வியட்நாம் தலைநகரம் ஹனாய் உள்ளிட்ட மூன்று இடங்களில் இன்று துவங்குகிறது.
இதில் பங்கேற்க, புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் அடங்கிய கலாசார குழுவினர், புதுச்சேரி அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் தலைவர் நாரா கலைநாதன் தலைமையில் 16 பேர் புதுச்சேரியில் இருந்து நேற்று வியட்நாம் சென்றனர்.
கடந்த 2023ம் ஆண்டு வியட்நாம் கலாசார குழு புதுச்சேரிக்கு வந்து 11வது இந்திய- வியட்நாம் நட்புறவு கலாசார விழாவை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, வியட்நாம்- இந்திய நட்புறவு திருவிழா, இவ்வாண்டு வியட்நாமில் நடக்கிறது.

