/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கியூர் காது கருவிகள் கிளினிக் இலவச மருத்துவ முகாம்
/
கியூர் காது கருவிகள் கிளினிக் இலவச மருத்துவ முகாம்
கியூர் காது கருவிகள் கிளினிக் இலவச மருத்துவ முகாம்
கியூர் காது கருவிகள் கிளினிக் இலவச மருத்துவ முகாம்
ADDED : டிச 15, 2024 06:19 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் கியூர் காது கருவிகள் கிளினிக்கில் நடக்கும் இலவச மருத்துவ முகாமில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, வில்லியனுார் சாலை, விவேகானந்தா நகரில் கியூர் காது மற்றும் பேச்சு கிளினிக் இயங்கி வருகிறது. இங்கு பேச்சு, மொழி மற்றும் கேட்பியல் நிபுணர் முத்துக்குமரன் ஞானசேகரன் பிறந்தநாளையொட்டி, இலவச மருத்துவ முகாம் கடந்த, 5ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
முகாம் காலை 10:00 மதல் இரவு 7:00 மணி வரை நடக்கிறது. முகாமில் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பேச்சு மற்றும் காது பரிசோதனை செய்யப்படுகிறது. இலவச பேச்சு மற்றும் காது பரிசோதனை, காது கருவிகள் பொருத்தி காண்பித்தல், காது கருவிகள் சரி செய்யப்படுகிறது.
அதேபோல, கடலுார், மஞ்சக்குப்பம், நேதாஜி சாலையிலும், சிதம்பரம், கீழத்தெரு, மாரியம்மன் கோவில் கோவில் அருகிலும், சென்னை வடபழனி, திருத்தணி, காஞ்சிபுரம் கிளைகளிலும் இலவச முகாம் வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.