/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தகராறை தட்டி கேட்டவருக்கு வெட்டு
/
தகராறை தட்டி கேட்டவருக்கு வெட்டு
ADDED : ஜன 20, 2025 06:24 AM
புதுச்சேரி: தகராறை தட்டி கேட்டவரை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அரும்பார்த்தபுரம் வி.மணவெளி தண்டுக்கரை வீதியைச் சேர்ந்தவர் குமார், 37. இவரது வீட்டில் தங்கை அமலோற்பவமேரி, அவரது கணவர் கண்ணன் ஆகியோர் தங்கியுள்ளனர்.
வீட்டில் இருந்த குமார் மனைவி ஜெயராணி, அமலோற்பவமேரி ஆகியோரை, கடந்த 12ம்தேதி இரவு பக்கத்து வீட்டில் வாடகை இருக்கும் கலையரசன் 38, என்பவர் திட்டி யுள்ளார். இதனை அமலோற் பவ மேரியின் கணவர் கண்ணண் தட்டிக்கேட்டார்.
இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கலையரசன் காய்கறி வெட்டும் கத்தியால், கண்ணனை இடது கையில் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து அமலோற்பவமேரி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.