/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவருக்கு வெட்டு: 10 பேருக்கு வலை
/
மாணவருக்கு வெட்டு: 10 பேருக்கு வலை
ADDED : ஜன 19, 2025 05:52 AM
நெட்டப்பாக்கம்: கல்லுாரி மாணவரை கத்தியால் வெட்டிய 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மதகடிப்பட்டில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் 3ம் ஆண்டு படிக்கும் 17 வயது மாணவர்கள் இருவருக்குள் கடந்த 11ம் தேதி கல்லுாரி கேண்டினில் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து ஒரு மாணவர், அவரின் நண்பர்கள், செல்வகுமார், தமிழ் 23 , சத்யா 23, மணி 23, குமார் 23, ஆதித்யா 23, பிரதீப் 23, அவினேஷ் 23, சூர்யா 23, உட்பட 10 பேர் சேர்ந்து, மற்றொரு மாணவரை நெட்டப்பாக்கத்திற்கு போன் செய்து, வரவழைத்து திட்டி, கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த அம்மாணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அவரது புகாரின் பேரில், 10 பேர் மீது நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து, தேடி வருகின்றனர்.

