நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் வெட்டிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியாங்குப்பம் பழைய பூரணாங்குப்பம் வீதியை சேர்ந்தவர் பிரவீன்குமார், 19; கொத்தனார். அரியாங்குப்பம் லோகநாதன், கொசப்பாளையம் ரிஷிகுமார், பெரியக்காட்டுபாளையம் பிரித்தி. இவர்களுக்கிடையே முன்விரோதம் உள்ளது.
அரியாங்குப்பம் புதுகுளம் பகுதிக்கு மது குடிப்பதற்கு, பிரவீன்குமாரை அவர்கள் அழைத்து சென்று, கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரவீன்குமார் புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, லோகநாதன் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.