/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாலிபருக்கு வெட்டு: 3 பேருக்கு வலை
/
வாலிபருக்கு வெட்டு: 3 பேருக்கு வலை
ADDED : அக் 24, 2025 03:08 AM
புதுச்சேரி: முன் விரோதத்தில் வாலிபரை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பாக்கம் கூட்ரோட்டைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 35; டிரைவர். இவர் நேற்று முன்தினம் மதியம் புதுச்சேரி மணக்குப்பம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது பைக்கிற்கு பெட்ரோல் போட சென்றார்.
அப்போது அங்கு வந்த குளத்துமேட்டு பகுதியைச் சேர்ந்த சூர்யா, 28; அரவிந்த், 24; குமார், 26, ஆகியோர் முன்விரோதம் காரணமாக சதீஷ்குமாரை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். படு காயமடைந்த சதீஷ்குமார் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில், சூர்யா உட்பட மூன்று பேர் மீது மங்கலம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

