ADDED : பிப் 17, 2026 05:38 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் 2 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 46 ஆயிரம் இழந்துள்ளனர்.
புதுச்சேரி, வில்லியனுாரை சேர்ந்த பெண்ணை, தொடர்பு கொண்ட மர்மநபர், வீட்டில் இருந்தே பகுதிநேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதைநம்பிய, அப்பெண், மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ. 39 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். பின், அதன் மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை.
இதேபோல், தேங்காய்திட்டை சேர்ந்தவர் ரூ.7 ஆயிரம் என 2 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 46 ஆயிரம் இழந்துள்ளனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
