ADDED : மார் 21, 2026 10:00 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பேர் மோசடி கும்பலிடம் 75 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளனர்.
லாஸ்பேட்டை, சாமிபிள்ளைத்தோட்டத்தை சேர்ந்தவரை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார். இதைநம்பிய, அவர் மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ. 51 ஆயிரத்து 487 முதலீடு செய்தார். பின், அதன் மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை.
இதேபோல், சாரத்தை சேர்ந்த பெண் 20 ஆயிரத்து 200, முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் 3 ஆயிரத்து 446 என, 3 பேர் மோசடி கும்பலிடம் 75 ஆயிரத்து 133 ரூபாய் இழந்துள்ளனர். இது குறித்து புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
