தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 5 பேரிடம் சைபர் கும்பல் ரூ. 70 ஆயிரம் அபேஸ் 

 5 பேரிடம் சைபர் கும்பல் ரூ. 70 ஆயிரம் அபேஸ் 

 5 பேரிடம் சைபர் கும்பல் ரூ. 70 ஆயிரம் அபேஸ் 


ADDED : ஏப் 23, 2026 11:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 11:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் 5 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 70 ஆயிரம் இழந்துள்ளனர்.

புதுச்சேரி கோவிந்தசாலையை சேர்ந்த பெண்ணின், இன்ஸ்டாகிராம் கணக்கில் சகோதரர் பெயரில் மருத்துவ அவசரம் பணம் தேவை என குறுச்செய்தி மொபைல் எண்ணுடன் வைத்துள்ளது. அதை உண்மை என நம்பிய அப்பெண், அதில் இருந்த மொபைல் எண்ணிற்கு ரூ. 30 ஆயிரம் அனுப்பி வைத்துள்ளார். அதன்பிறகே ஆன்லைன் மோசடி கும்பல் இன்ஸ்டாகிராமில் தனது சகோதரர் பெயரில் போலியாக கணக்கு துவங்கி, பணத்தை பெற்று ஏமாற்றியது தெரியவந்தது.

இதேபோல், புது சாரத்தை சேர்ந்தவர், பேஸ்புக்கில் நிதி அமைச்சரின் முதலீடு திட்டம் தொடர்பான விளம்பரத்தை பார்த்துள்ளார். அதை நம்பி, அந்த திட்டத்தில் ரூ. 18 ஆயிரத்து 499 முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.

மடுகரையை சேர்ந்த பெண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர், வங்கி அதிகாரி போல் பேசியுள்ளார். அதில், வங்கி கணக்கின் கே.ஓய்.சி.,யை புதுப்பிக்க ஏ.டி.எம். கார்டு விவரங்கள் மற்றும் ஓ.டி.பி. எண்ணை கேட்டுள்ளார். இதைநம்பிய அவர், மர்மநபருக்கு அனைத்து விவரங்களையும் தெரிவித்துள்ளார். அதன்பின் அவரது வங்கியில் இருந்து ரூ.10 ஆயிரத்து 500யை மோசடி கும்பல் எடுத்து ஏமாற்றியுள்ளது.

இதேபோல், வடமங்கலத்தை சேர்ந்தவர் 6 ஆயிரத்து 393, பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் 4 ஆயிரத்து 500 என 5 சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 69 ஆயிரத்து 892 இழந்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us