/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சைபர் கிரைம் கும்பல் ரூ.4.46 லட்சம் மோசடி
/
சைபர் கிரைம் கும்பல் ரூ.4.46 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 02, 2025 07:28 AM
புதுச்சேரி : சைபர் மோசடி கும்பலிடம் 3 பெண்கள் உட்பட 7 பேர் ரூ.4.46 லட்சம் இழந்துள்ளனர்.
புதுச்சேரி சஞ்சீவி நகரை சேர்ந்த ஆண் நபரை தொடர்பு கொண்ட மர்ம நபர், டில்லி விமான நிலைய அதிகாரி போல் பேசியுள்ளார். அதில், உங்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பார்சல் வந்துள்ளது.
அதனை பெறுவதற்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டுமென கூறியுள்ளார். இதைநம்பிய அவர் மர்ம நபருக்கு 25 ஆயிரம் அனுப்பியுள்ளார். ஆனால், பார்சல் ஏதுவும் வரவில்லை.
இதேபோல், பகுதிநேர வேலையாக கூடப்பாக்கத்தை சேர்ந்த ஆண் நபர் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 400, கொசப்பாளையத்தை சேர்ந்த பெண் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 440, திருக்கனுாரை சேர்ந்த ஆண் நபர் 7 ஆயிரம், லாஸ்பேட்டை சேர்ந்த பெண் 16 ஆயிரம், திருபுவனை சேர்ந்த ஆண் நபர் 15 ஆயிரம், சஞ்சீவி நகரை சேர்ந்த பெண் 11 ஆயிரம் என சைபர் மோசடி கும்பலிடம் 4 லட்சத்து 46 ஆயிரத்து 840 ரூபாய் ஏமாந்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.