/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
10 பேரிடம் ரூ.18.39 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
/
10 பேரிடம் ரூ.18.39 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
10 பேரிடம் ரூ.18.39 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
10 பேரிடம் ரூ.18.39 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
ADDED : டிச 26, 2024 05:38 AM
புதுச்சேரி: புதுச்சேரியில், 10 பேரிடம் ரூ.18.39 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்காலை சேர்ந்தவர் ராம்குமார். இவரை மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு, பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என, கூறினர்.இதை நம்பிய ராம்குமார், மர்ம நபர்கள் அனுப்பிய 'லிங்க்' மூலம் பல்வேறு தவணைகளில், ரூ.11.44 லட்சத்தை முதலீடு செய்தார்.
ஆனால் அதில் வந்த லாபத்தை ராம்குமாரால் எடுக்கவில்லை. அதற்கு பிறகு தான் அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரிந்தது.
இதேபோல், வீட்டில் இருந்தே ஆன்லைனில் அதிகம் சம்பாதிக்கலாம் என்று மர்ம நபர் கூறியதை நம்பி, வில்லியனுார், குஷி - ரூ.2.22 லட்சம்; காந்தி நகர், சிவா சரவணன் - ரூ.1.16 லட்சம், தனித்தனியேமோசடி கும்பலிடம் அனுப்பி ஏமாந்தனர்.
மேலும் சாந்தி நகர், ஓம் பிரகாஷ் - ரூ.60 ஆயிரம்; பூரணாங்குப்பம், பால பாஸ்கரன் - ரூ.22 ஆயிரம்; ஸ்ரீரீவாஸ் - ரூ.10 ஆயிரம்; ஜனனி - ரூ.1.74 லட்சம்; முத்திரை பாளையம், மனோகரன் - ரூ.47 ஆயிரம்; மனோ - ரூ.20 ஆயிரம்; மார்ட்டின் ஜோசப் - ரூ.24 ஆயிரம்,எனஆன்லைனில் ஏமாந்துள்ளனர்.
மொத்தம், 10 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.18.39 லட்சத்தை இழந்தனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.