/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மோசடியாக இன்சூரன்ஸ் போட வைத்தால் நடவடிக்கை; சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
/
மோசடியாக இன்சூரன்ஸ் போட வைத்தால் நடவடிக்கை; சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
மோசடியாக இன்சூரன்ஸ் போட வைத்தால் நடவடிக்கை; சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
மோசடியாக இன்சூரன்ஸ் போட வைத்தால் நடவடிக்கை; சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
ADDED : ஜூன் 11, 2025 07:44 AM
புதுச்சேரி; லோன் தருவதாக கூறி, மோசடியாக இன்சூரன்ஸ் போட வைத்தால், அந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள், ஏஜென்டுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
வில்லியனுாரை சேர்ந்தவர் செந்தில்குமார், 65. இவரை தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொண்ட நபர், குறைந்த வட்டியில் 13 லட்சம் ரூபாய் வரை கடன் தருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, கடன் பெற விண்ணப்பித்தபோது, 13 லட்சம் கடன் வழங்க, இன்சூரன்ஸ் போட வேண்டுமென கூறியுள்ளனர். இதையடுத்து, செந்தில்குமாரும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 32 ஆயிரம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ் போட்டு, அதற்கான ஆவணங்களை மர்மநபர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பினார்.
அதன்பின், கடன் தருவதாக கூறிய தனியார் நிதி நிறுவனத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கூறுகையில், 'சமீப காலமாக தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பொது மக்களிடம் நேரடியாக இன்சூரன்ஸ் பிடிக்க முடியாததால், தங்களது ஏஜெண்டுகள் மூலம் குறைந்த வட்டிக்கு லோன் தருவதாக கூறுகின்றன.
பின், கடன் பெற இன்சூரன்ஸ் கட்ட வேண்டுமென தெரிவித்து, இன்சூரன்ஸ் போட வைத்து, அதற்கான பணம் கட்டிய பிறகு, அவர்கள் கூறிய லோன் தொகையை தராமல் ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விடுகின்றனர். இதுபோன்று, புதுச்சேரி சைபர் கிரைம் நிலையத்திற்கு இதுவரையில் 20க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.
இதுபோன்று லோன் தருவதாக கூறி, மோசடியாக இன்சூரன்ஸ் போட வைப்பது சட்டப்படி குற்றமாகும். ஆகையால், இதுபோன்று ஏமாற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், அந்த ஏஜெண்டுகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்துள்ளனர்.