/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இணையவழி மோசடிக்காரர்களுக்கு துணை போனால் கடும் நடவடிக்கை; சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
/
இணையவழி மோசடிக்காரர்களுக்கு துணை போனால் கடும் நடவடிக்கை; சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
இணையவழி மோசடிக்காரர்களுக்கு துணை போனால் கடும் நடவடிக்கை; சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
இணையவழி மோசடிக்காரர்களுக்கு துணை போனால் கடும் நடவடிக்கை; சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
ADDED : ஜூன் 12, 2025 07:07 AM

புதுச்சேரி : இணையவழி மோசடிக்காரர்களுக்கு வங்கிக் கணக்கு துவங்கி கொடுப்பது, வேறு வழியில் துணை போவது தெரிந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இணையவழி மோசடிக்காரர்களுக்கு அதிக பணம் பரிவர்த்தனை செய்ய வங்கிக் கணக்கு தேவைப்படுவதால் சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு, அவர்கள் கொடுக்கும் வங்கிக் கணக்கிற்கு கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை கூறுகின்றனர்.
இதனால், சிலர் போலியான ஜி.எஸ்.டி. எண், நிறுவனங்களின் பதிவு, சான்றிதழ் மூலம் தங்கள் பெயரில் வங்கிக் கணக்கு துவங்கி கொடுக்கின்றனர்.
அத்தகைய வங்கி கணக்குகளை திறக்க, சில கடைகளை வாடகைக்கு எடுத்து கம்பெனி துவங்குகின்றனர்.
ஆனால் அந்த கம்பெனிகள் பெயரளவில் மட்டுமே அங்கு இருக்கும். அந்த கடைகளை காட்டி பெற்ற வங்கி கணக்கு (கரண்ட் அக்கவுண்ட்) விவரங்களை இணையவழி குற்றவாளிகளிடம் கொடுத்து பணம் பெற்று கொண்டு, இணையவழி குற்றங்கள் செய்ய துணை போகின்றனர்.
புதுச்சேரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கூறுகையில், 'பொது மக்களிடம் கடைகள் மற்றும் இடத்தை யாரேனும் வாடகைக்கு கேட்டு வந்தால், அவர்கள் எதற்காக இடம் கேட்கின்றனர். அங்கு என்ன செய்ய உள்ளனர் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வழங்க வேண்டும்.
வங்கி ஊழியர்கள் வங்கிக் கணக்கு துவங்குவதற்கு முன் அவர்கள் அளிக்கும் ஆவணங்களான ஜி.எஸ்.டி., எண், உத்யம் சான்றிதழ் மற்றும் நிறுவனங்களின் பதிவு ஆகியவை உண்மையான சான்றிதழ்களா என்று உறுதிப்படுத்திக் கொண்டு வங்கிக் கணக்கை துவங்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
அத்தகைய ஜி.எஸ்.டி. எண், உத்யம் சான்றிதழ் மற்றும் நிறுவனங்களின் பதிவு அளிக்கும் அரசு ஊழியர்கள், அந்த சான்றிதழுக்காக விண்ணப்பிக்கும் நபரையும், அந்த இடத்தையும் முறையாக சரிபார்த்த பின் சான்றிதழ் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
யாரேனும் இணையவழி மோசடிக்காரர்களுக்கு துணை போவது தெரிய வந்தால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.